Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை

By: Karunakaran Mon, 30 Nov 2020 12:12:28 PM

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவரது எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பின் அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற கருத்தும் பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தனது உடல் நிலை மற்றும் டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள தகவல் உண்மைதான் என்றார்.

rajinikanth,political party,election,tamilnadu ,ரஜினிகாந்த், அரசியல் கட்சி, தேர்தல், தமிழ்நாடு

இருப்பினும், அரசியல் கட்சி குறித்து, தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார். ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீடித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிகிறார். கட்சி தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது, பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளார் என தெரிகிறது.

Tags :