Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் சத்யராஜின் தாய் காலமானார்... திரையுலகத்தினர் இரங்கல்

நடிகர் சத்யராஜின் தாய் காலமானார்... திரையுலகத்தினர் இரங்கல்

By: Nagaraj Sat, 12 Aug 2023 09:52:17 AM

நடிகர் சத்யராஜின் தாய் காலமானார்... திரையுலகத்தினர் இரங்கல்

கோவை: நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வில்லனாக தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தார். இப்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

sathyaraj,mother,passed away,film industry,condolence,cremation ,சத்யராஜ், தாயார், காலமானார், திரையுலகத்தினர், இரங்கல், உடல் தகனம்

94 வயதான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே நேற்று மாலை 4 மணி அளவில் காலமானார்.தகவல் அறிந்த சத்யராஜ் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து கோவை வந்தார். சத்யராஜின் தாயார் மறைவிற்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று சத்யராஜின் தாயார் உடல் தகனம் செய்ய இருப்பதால் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கோவை விரைந்துள்ளனர்.

Tags :
|