Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வியூகம்?

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வியூகம்?

By: Nagaraj Thu, 31 Aug 2023 6:47:30 PM

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வியூகம்?

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பக் குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இயக்கத் தலைமை வெளியிடும் தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தேவையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தில் 1600 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. இதை 10 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

actor vijays,movement,parliamentary elections ,அரசியல் களம், நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தல், முடிவு

நடிகர் விஜய்யும் துணை அமைப்புகளை உருவாக்கி அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தொகுதி வாரியாக சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, ஏழை மாணவர்களுக்கான இலவச மாலை நேர பயிற்சி வகுப்புகளும் அடித்தட்டு மக்களைக் கவர்ந்தன.

விஜய்யின் வேகமான அசைவுகளையும், செயல்பாடுகளையும் பார்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாவிட்டாலும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு பலத்தை சோதிக்க முடிவு செய்துள்ளதாக பேரவை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags :