நடிகர் விஜய்யின் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கிறது... நாளை மறுநாள் மகளிர் அணி கூட்டம்
By: Nagaraj Thu, 07 Sept 2023 06:56:26 AM
சென்னை: விஜய் அரசியலின் அடுத்த மூவ் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் என்று தெரிய வந்துள்ளது. ஆமாங்க. விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் வருவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மைகாலமாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளின் கூட்டம் வரும் சனிக்கிழமை பனையூரில் உள்ள அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அந்த இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Tags :
politics |
arena |