நடிகை பரினீதி- ஆம்ஆத்மி எம்பி ராகவ் திருமண நிச்சயதார்த்த விழா
By: Nagaraj Sun, 14 May 2023 12:56:11 PM
புதுடில்லி: நடிகை பரினீதி- எம்பி ராகவ் நிச்சயதார்த்தம்... டெல்லியில் நடைபெற்ற பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம்பி ராகவ் சட்டா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திரைநட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மணமுடிக்க உள்ள காதலர்கள் இருவரும் வெள்ளை ஆடையணிந்து வலம் வந்தனர். சமூக ஊடகப் பதிவுகளில் தங்களின் நீண்டகால கனவு நனவானதாக தெரிவித்தனர்.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள், நேரில் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் மராட்டிய அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மற்றும் பிற கட்சி தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
Tags :
kejriwal |