Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன் - நடிகை தமன்னா

தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன் - நடிகை தமன்னா

By: Monisha Thu, 18 June 2020 11:32:09 AM

தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன் - நடிகை தமன்னா

கொரோனா ஊரடங்கினால் மொத்த திரையுலக நடிகர் நடிகைகளும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அவ்வப்போது சில கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை தமன்னா தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:- "மனதின் மூலம் தான் மனிதர்களுக்கு அழகு வருமே தவிர, வெளிப்புற தோற்றம், நிறம் இவற்றில் அழகு இல்லை. நானும் மனதில் அழகும் நன்னடத்தையும் இருப்பதால் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறேன். 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன்.

web series,actress tamanna,curfew,cinema,corona virus ,வெப் தொடர்,நடிகை தமன்னா,ஊரடங்கு,சினிமா,பாகுபலி

எனது திரையுலக வாழ்க்கையை இப்போது திரும்பி பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மனதுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் அந்த தொழிலுக்கு வரும் எல்லோருமே என்னை மாதிரி உயர்ந்த இடத்துக்கு வருவார்களா என்பது தெரியாது. எனக்கு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் பாகுபலி படத்தில் நான் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த படம் எனக்கு மிகவும் சவாலாகவும் இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் சமையல் கற்று இருக்கிறேன்.

தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இப்போதைய சூழ்நிலையில் வெளியில் அடி எடுத்து வைக்கவே பயமாக உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் பாதுகாப்பும் முக்கியம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|