Advertisement

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்

By: vaithegi Sun, 19 Nov 2023 1:24:04 PM

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்

சென்னை: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் ...தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அளவுக்கு பெயர் பெற்றவர் நடிகை விஜயசாந்தி (57). கடந்த 1998-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயசாந்தி, அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடிக்கலாம் என நினைத்தார். ஆனால், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை என பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் பின்னர், தல்லி தெலங்கானா என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு தனது கட்சியை சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்தார்.

முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் அவர் இணைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மேதக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டில் அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் விஜயசாந்தி இணைந்தார்.

actress vijayashanthi,tamil,telugu,malayalam,kannada , நடிகை விஜயசாந்தி ,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு பாஜக சீட் வழங்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.எனவே இதன் காரணமாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஹைதராபாத்தில் நேற்று அவர் காங்கிரஸில் இணைந்தார்.

இதையடுத்து இது குறித்து விஜயசாந்தி கூறும்போது, ‘‘முதல்வர் சந்திரசேகர ராவின் ஊழல் ஆட்சி குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்ததால் பாஜகவில் இணைந்தேன். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். சந்திரசேகர ராவ் ஊழலை அம்பலப்படுத்தி அவரிடமுள்ள சொத்துகளை பறிமுதல் செய்வோம்’’ என அவர் தெரிவித்தார்.

Tags :
|
|