அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது... நிதியமைச்சர் தகவல்
By: Nagaraj Mon, 13 Mar 2023 10:07:29 PM
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் தகவல்... அதானி குழுமத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடரை கூட்டியதையும், இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களால் கூச்சல், குழப்பம் நிலவுவதையும் பார்க்கிறோம்.
இந்நிலையில் அதானி குழுமத்தின் கடன் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது.
அதானி கடன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி எந்த நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது. அவரது பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.