Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தார் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தார் அதானி

By: Nagaraj Fri, 16 Sept 2022 4:54:35 PM

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தார் அதானி

புதுடில்லி: 2ம் இடம் பிடித்தார் அதானி... உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர். இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக இருந்தார்.

Tags :