Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும்

திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும்

By: Nagaraj Fri, 10 Feb 2023 11:59:20 PM

திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும்

அகர்தலா: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 2023ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாணிக் சாகா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிநடைபெறுகிறது.திரிபுராவில் உள்ள, 60 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, பிப்ரவரி, 16ல் தேர்தல் நடக்கிறது.

jp natta,promise,tripura election, ,ஜேபி நட்டா, திரிபுரா தேர்தல், வாக்குறுதி

இந்நிலையில் அகர்தலா சென்ற, பா.ஜ.க, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திரிபுராவின் பழங்குடியினப் பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கப்படும்.

விவசாயிகளின் உதவித்தொகை உயர்த்தப்படும். ரப்பரை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை உற்பத்தி மண்டலங்கள் தொடங்கப்படும் . மதகுரு அனுகுல் சந்திரா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு 5 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :