Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பு எதிரொலி .. ஜூன் 4 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

பள்ளிகள் திறப்பு எதிரொலி .. ஜூன் 4 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Sat, 03 June 2023 3:48:05 PM

பள்ளிகள் திறப்பு எதிரொலி  ..  ஜூன் 4 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் திறக்கப்பட இருக்கும் நிலையில் மக்களின் வசதிக்காக முக்கிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் ..... தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 7 -ம் தேதி திறக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் கோடை விடுமுறையை கழிக்க வெளி ஊர் சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு இந்த வார இறுதியில் திட்டமிடுவார்கள். அதனால் இந்த வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் பேருந்துகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

buses,schools ,பேருந்துகள் ,பள்ளிகள்

அதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதனையடுத்து அதன் படி சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, திருநெல்வேலி, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளன.

மேலும் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நேற்று (ஜூன் 2) முதல் நாளை (ஜூன் 4) வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|