Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:31:13 PM

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21, 22ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டன. நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அதே நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. பண்டிகை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிகம் வருவதால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21, 22ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

holiday,ramadan,extra bus,congestion,preparedness ,விடுமுறை, ரமலான், கூடுதல் பேருந்து, கூட்ட நெரிசல், தயார் நிலை

இந்நிலையில் இந்த வார இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகின்றனர். அதனால் பேருந்துகளில் கூட்டம் அலை மோதி சிரமம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை , நாளை மறுநாள் ஏப்ரல் 21,22 ம் தேதிகளில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் 500 வரை இயக்கப்படும். பயணிகளின் தேவைகளை பொறுத்து கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் விடுமுறை காலங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்

Tags :