Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கம்

பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கம்

By: vaithegi Wed, 08 Nov 2023 2:26:59 PM

பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கம்

சென்னை : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளதாவாது, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 09.11.2023, 10.11.2023 மற்றும் 11.11.2023 ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


metro rail service,public ,மெட்ரோ ரயில் சேவை,பொதுமக்கள்

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ இரயில் தெரிவித்துக்கொள்கிறது.என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags :