பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம்
By: Nagaraj Wed, 30 Nov 2022 9:21:05 PM
கனடா: கனடாவில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வரும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை காரணமாக சில கெடுபிடிகளை தளர்த்துவதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கு கனடாவில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச ரீதியில் மருத்துவ கற்கைகளை பூர்த்தி செய்தவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் குடும்ப மருத்துவர்கள் ஆக கடமை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் கிராமிய பகுதிகளில் கடமையாற்றி அதன் பின்னர் அவர்கள் நகர பகுதிகளுக்கு மாற்றம் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கிராமிய பகுதிகளில் மருத்துவராக
சேவையாற்றியவர்கள் பின்னர் நகரங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள
முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்
மக்கள் குடும்ப மருத்துவர்களை தேடிக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி
வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே அதிக எண்ணிக்கையிலான
மருத்துவர்களுக்கு கிராக்கி உள்ள விவரங்கள் இவ்வாறான ஒரு பின்னணியில்
வெளிநாட்டில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு கனடாவில்
சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது