Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்

விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்

By: vaithegi Wed, 01 Feb 2023 6:34:08 PM

விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்

சென்னை: கூடுதல் ரயில்கள் இயக்கம் .... தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விழுப்புரம் - கடலூர் துறைமுகம் மெமு ரயில் (வண்டி எண் 06131) காலை 9.05-க்கு விழுப்புரத்தில் புறப்பட்டு காலை 11.20-க்கு கடலூர் துறைமுகத்தை வந்தடையும்.

இதனை அடுத்து மறுமார்க்கத்தில் கடலூர் துறைமுகம் - விழுப்புரம் மெமு ரயில்(வண்டி எண் 06132) பிற்பகல் 2.50 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விருத்தாச்சலம், உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடியில் நின்று செல்லும்.

trains,villupuram,vridthachalam ,ரயில்கள் ,விழுப்புரம் ,விருத்தாச்சலம்

இதேபோன்று கடலூர் துறைமுகம் - விருதாச்சலம் மெமு ரயில்(வண்டி எண்.06134 காலை 11.30 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு விருத்தாசலத்தை வந்தடையும்.

இதையடுத்து மறு மார்க்கத்தில் விருத்தாசலம் - கடலூர் துறைமுகம் மெமு ரயில் (வண்டி எண் 06133) மதியம் 1.20 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு 2.40 மணிக்கு கடலூரை வந்தடையும். இந்த ரயில் உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி நின்று செல்லும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|