Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

By: Nagaraj Thu, 21 May 2020 6:41:02 PM

இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

விரைவில் கூடுதல் ரயில்கள்... ஊரடங்கில் இருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது சில தளர்வுகளுடன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில், மெட்ரோ, விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏசி வசதி அல்லாது 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது.

டிக்கெட் முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

extra trains,nature,services,ticket delivery ,கூடுதல் ரயில்கள், இயல்பு நிலை, சேவைகள், டிக்கெட் விநியோகம்

டிக்கெட் முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்துள்ளது. இதனால், விரைவில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தொடரும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும். அதற்கான ஆய்வுகள் நடத்தி நெறிமுறைகளை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|