Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கம்

ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கம்

By: vaithegi Sun, 14 Aug 2022 7:51:16 PM

ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கம்

சென்னை: இந்தியாவில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து ரயில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவில்லா ரயில்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது . அந்த வகையில் IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் போட்டிங் பாயின்டையும் மாற்றி கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கொண்டு பயணிகள் ரயில் நிலையம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

train,motion ,ரயில், இயக்கம்

அதே போன்று தற்போது உணவுகளை வாங்கும் போது க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தொடர் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் வழக்கமாக சேலம் ரயில் நிலையத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றை அனுப்ப நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை மற்ற பகுதிகளுக்கு அனுப்பபட்டு வரும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பிறகு ரயில்களில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|