Advertisement

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-2 விண்ணில் ஏவப்பட்டது

By: Nagaraj Sat, 02 Sept 2023 3:41:29 PM

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-2 விண்ணில் ஏவப்பட்டது

ஐதராபாத்: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்- 1 திட்டமிட்டப்படி விண்ணில் ஏவப்பட்டது.

சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு ஏவப்பட்டது.

விண்ணில் ஏவிய 73-வது நிமிடத்தில் புவி வட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஆதித்யா எல் - 1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சூரியனை நோக்கி பயணிக்கும்.

லக்ராஞ்ஜியன் பாயிண்ட் என அழைக்கப்படும் எல் 1 பகுதிக்கு சென்று அங்கிருந்தவாறு சூரியனை ஆராயும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 5 லெக்ரேஞ்சியன் புள்ளிகளில், முதலாவது புள்ளி தான் சூரியனை ஆய்வு செய்ய வசதியானது.

america,russia,european space,spaceships,india ,அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி, விண்கலங்கள், இந்தியா

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஈர்ப்பு விசைகளை சமநிலைப்படுத்தும் புள்ளிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்புகிறது இஸ்ரோ. பூமியில் இருந்து ஏவப்படுவதில் இருந்து 4 மாத கால பயணம் மேற்கொண்டு எல்-1 புள்ளிக்குள் ஆதித்யா-எல் 1 நுழையும். சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு ஆகியவற்றை விண்கலம் ஆராய்ச்சி செய்யும். சூரியனின் இயக்கவியல், வெப்பமாக்கல் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மா குறித்து ஆய்வு செய்ய திட்டம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சூரியப் புயலின் துகள் பரிசோதனை, எல்-1 புள்ளி அருகே உள்ள நிலை உள்ளிட்ட குறித்த ஆராய்ச்சியும் விண்கலம் மேற்கொள்ளும். ஆய்வுகள் மூலம் சூரியனில் நடக்கும் அணு கரு இணைவு பற்றி தெளிவாக புரிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை. திட்டமிட்டபடி ஆதித்யா விண்கலம் தனது இலக்கை அடைந்து விட்டால் சூரியனை ஆராயும் 4வது நாடாக இந்தியா விளங்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, ஏற்கனவே விண்கலங்களை அனுப்பியுள்ளன.

Tags :
|