Advertisement

உதவி பேராசிரியர் பணி தகுதித் தேர்வு ஒத்தி வைப்பு

By: Nagaraj Wed, 10 Aug 2022 08:19:24 AM

உதவி பேராசிரியர் பணி தகுதித் தேர்வு ஒத்தி வைப்பு

சென்னை: தேர்வு ஒத்திவைப்பு... உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12,13,14-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த இந்த இரண்டாம் கட்ட நெட் தேர்வு வரும் செப்டம்பா் மாதம் 20 முதல் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) தெரிவித்துள்ளது.

necessary,university,assistant professor,work,eligibility test ,அவசியம், பல்கலைக்கழகம், உதவிப்பேராசிரியர், பணி, தகுதி தேர்வு

இதுகுறித்து யூஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறியதாவது: 33 பாடங்களுக்கான முதல் கட்ட நெட் தேர்வு கடந்த ஜூலை 9, 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது, 2021 டிசம்பா் மாதத்துக்கான தோவு மற்றும் ஜூன் மாத தேர்வு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட 64 பாடங்களுக்கான இரண்டாம் கட்ட நெட் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த தோவானது செப்டம்பா் 20 முதல் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று கூறினாா்.

பல்கலைக்கழக, கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது அவசியமாகும்.

Tags :
|