Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக அலுவலகத்திற்கு சீல் ..எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு

அதிமுக அலுவலகத்திற்கு சீல் ..எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு

By: vaithegi Thu, 14 July 2022 7:39:10 PM

அதிமுக அலுவலகத்திற்கு சீல் ..எதிரான வழக்கு  நாளை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அவர்களின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

மனுதாரர்கள் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. முன், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில்,"அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது .ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர்.

case,aiadmk ,வழக்கு  ,அதிமுக

மேலும் ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை.தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை" என்றார்.

இதை தொடர்ந்து அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது, போலீஸ் தலையிட்டதால்தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் ஒன்று செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உள்ளது.

Tags :
|