Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

By: Nagaraj Mon, 21 Nov 2022 10:32:20 PM

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். காரணம் இதுதான்.


இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தார். வைரமுத்து சார்பில் ஆஜரான வக்கீல் பதில் மனு தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

admk,eps,ops,general assembly matters,adjournment,inquiry ,
அதிமுக, உச்சநீதிமன்றம், பொதுக்குழு விவகாரம், ஒத்திவைப்பு, விசாணை

இது தொடர்பாக கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் கூறியபோது, இது தொடர்பான கோரிக்கை கடிதம் எங்களுக்கு வரவில்லை என்றும், விசாரணையை தள்ளிவைக்கக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய கடிதம்தான் கிடைத்தது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்கள் மற்றும் அதன் மூலம் தான் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் எங்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருத்தப்பட்ட அதிமுக விதிகளை வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
|
|
|