Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளிவைப்பு

By: vaithegi Thu, 22 June 2023 2:48:29 PM

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளிவைப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவரை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு இடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

recruitment application,senthil balaji , ஆட்கொணர்வு மனு,செந்தில் பாலாஜி

இதையடுத்து அப்போது பேசிய செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின்னர், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என கூறினார். வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வருகிற 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கப் பிரிவு கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Tags :