Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாகக்‌ காரணங்களினால்‌ ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாகக்‌ காரணங்களினால்‌ ஒத்திவைப்பு

By: vaithegi Sat, 03 Sept 2022 4:31:40 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாகக்‌ காரணங்களினால்‌ ஒத்திவைப்பு

சென்னை: மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

இதை அடுத்து 2022 ஆம் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. எனவே இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 18 முதல் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

teacher eligibility test dead,adjournment ,ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் ,ஒத்திவைப்பு

முதலில் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதற்கு பின் ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச்‌ செய்தியில்‌, ஆசிரியர் தகுதி தாள்‌ I தேர்வானது 10.09.2022 முதல்‌ 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது இந்த தேர்வு தேதியும் நிர்வாகக்‌ காரணங்களினால்‌ ஒத்திவைக்கப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி பின் அறிவிக்கப்படும்‌ என தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags :