Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By: Nagaraj Wed, 21 June 2023 8:51:40 PM

அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: விசாரணை ஒத்தி வைப்பு... செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அம்மனு நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கவே கூடாது என்று வாதிட்டார்.

judges,adjournment,order,high court,trial ,
நீதிபதிகள், ஒத்திவைப்பு, உத்தரவு, உயர்நீதிமன்றம், விசாரணை

செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையே கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு, இதயத்தில் உள்ள 4 அடைப்புகளை போலியாக எப்படி காட்ட முடியும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தனர்.

ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறி மனு மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags :
|
|