Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By: vaithegi Fri, 23 Dec 2022 3:19:06 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: இரு அவைகளும் ஒத்திவைப்பு ... நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது.

ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக இன்றுடன் முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

adjournment,winter session of parliament ,ஒத்திவைப்பு ,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

இந்த நிலையில் தகவலை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 29ம் தேதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ்,புத்தாண்டுக்காக முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்க பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்த, நிலையில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Tags :