Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் முதல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் முதல் தொடக்கம்

By: vaithegi Sun, 16 Apr 2023 3:25:25 PM

அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் முதல்  தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்தாண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் முதல் தொடங்கப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலிம் தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளும் சேர்க்கைப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டுமென பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன.

government school,student admission ,அரசுப் பள்ளி,மாணவர் சேர்க்கை

இதையடுத்து, வரும் கல்வியாண்டுக்கான(2023-24) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுவுள்ளது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கைக்கு அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். எனவே இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்’’ என அவர்கள் கூறினார்கள்.



Tags :