Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதித்த ஜனாதிபதி டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதித்த ஜனாதிபதி டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Sat, 03 Oct 2020 2:14:40 PM

கொரோனாவால் பாதித்த ஜனாதிபதி டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளை மாளிகை தகவல்... கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த 16 மணி நேரத்திற்கு பிறகு, பொதுவெளியில் தோன்றிய ட்ரம்ப், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6:16 மணிக்கு வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார்.

நீல நிற உடை, இருண்ட முகக்கவசம் அணிந்திருந்த ட்ரம்ப், ஊடகங்களுக்கு கை அசைத்தவாறு ஹொலிகொப்டரில் ஏறினார். அவருடன் தலைமை அதிகாரி மார்க் மெடோஸும் முகக்கவசம் அணிந்து பின்தொடர்ந்தார்.

hospital,admission,corona,trump,white house ,மருத்துவமனை, அனுமதி, கொரோனா, டிரம்ப், வெள்ளை மாளிகை

ட்ரம்ப் சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இறங்கினார். மருத்துவமனையின் பிரதான கட்டடத்திற்கு விரைவாக சவாரி செய்வதற்காக, தனது லிமோசினில் ஏறும் முன் தனது இராணுவ உதவியாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அதேவேளை கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட, அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் சிலநாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகரான 31 வயதான ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

Tags :
|
|