Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை

தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை

By: Monisha Tue, 22 Dec 2020 08:27:16 AM

தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், முதல் கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு நேற்று சென்னை வந்து ஆய்வு மேற்கொண்டது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில் முன்கூட்டியே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

election commission,single phase,election,admk,dmk ,தேர்தல் ஆணையம்,ஒரே கட்டம்,தேர்தல்,அ.தி.மு.க,தி.மு.க

இதேபோல், தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பது குறித்து அளிக்கப்பட்டு மனு மீது நடவடிக்கை எடுத்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசியல் கட்சியினருடனான சந்திப்பிற்கு பிறகு உயர்மட்டக்குழுவினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.

Tags :
|