Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று காலை 9.45 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு!

இன்று காலை 9.45 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு!

By: Monisha Wed, 07 Oct 2020 09:18:03 AM

இன்று காலை 9.45 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால் ஆளும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதும், வழிகாட்டுதல் குழு குறித்தும் இன்று காலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.45 மணியளவில் தலைமை அலுவலகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் தலைமை அலுவலகம் வருவார் எனத்தெரிகிறது.

இதையடுத்து, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது. அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|