Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ... இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ... இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

By: vaithegi Fri, 06 Jan 2023 08:49:09 AM

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ...   இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கொண்டு வருகிறது. இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஜன.4 தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து ஜன.4 இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நேற்று தள்ளி வைக்கப்பட்டது. எனவே இதன்படி, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பு வதங்கள் முன் வைக்கப்பட்டது.

edappadi palaniswami,a.d.m.k. general assembly ,எடப்பாடி பழனிசாமி ,அ.தி.மு.க. பொதுக்குழு

அதில் குறிப்பாக அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும்" போன்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இரு தரப்பினரும் இன்று வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.நேற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்கள் நடைபெற்றது. இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :