Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்; கே.பி.முனுசாமி தகவல்

அதிமுக உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்; கே.பி.முனுசாமி தகவல்

By: Monisha Thu, 13 Aug 2020 2:16:12 PM

அதிமுக உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்; கே.பி.முனுசாமி தகவல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

admk,cm candidate,chaos,consultative meeting,ministers ,அதிமுக,முதல்வர் வேட்பாளர்,குழப்பம்,ஆலோசனை கூட்டம்,அமைச்சர்கள்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தலைமைக்கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை.

சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|