Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்தர பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடக்கும்

உயர்தர பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடக்கும்

By: Nagaraj Wed, 07 Oct 2020 7:43:40 PM

உயர்தர பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடக்கும்

உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும்... தரம்-05 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படுமெனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இதற்கமைய எதிர்வரும்- 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும். உயர்தரப் பரீட்சை எதிர்வரும்-12 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம்-06 ஆம் திகதி வரை நடைபெறும்.

minister of government,examinations,health procedure,education ,அரசாங்கம், பரீட்சைகள், சுகாதார வழிமுறை, கல்வி அமைச்சர்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பரீட்சை மத்திய நிலையங்களிலும் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

மேற்படி பரீட்சைகள் ஏற்கனவே இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டமையால் மீண்டும் அதனைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் எண்ணவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

Tags :