Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா முழுவதும் 3 மாதங்களாக பரவி வரும் ஏ வகைக் காய்ச்சல் .. மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் 3 மாதங்களாக பரவி வரும் ஏ வகைக் காய்ச்சல் .. மக்களுக்கு அறிவுறுத்தல்

By: vaithegi Sun, 05 Mar 2023 06:39:25 AM

இந்தியா முழுவதும் 3 மாதங்களாக  பரவி வரும் ஏ வகைக் காய்ச்சல்  ..  மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியா : இந்தியா முழுவதும் 3 மாதங்களாக ஏ வகைக் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதுபற்றி ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து இது பற்றி, ''இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களாகவே எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல் , காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மற்ற இன்புளூயன்சாவைவிட இந்த வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

influenza type a. india ,ஏ வகைக் காய்ச்சல்.இந்தியா

எனவே இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இதற்கான சில அறிவுறுத்தல்களை மக்களுக்கு கூறியுள்ளது. அதில், தற்போது பரவி வரும் இருமல், காய்ச்சல், வாந்தி வருவது ஆகிய உணர்வு போன்றவை தென்பட்டால், பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நுண்ணுயிர் கொல்லி வகை மருத்துகளை எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது பொதுவாக, 5 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும் எனவும், 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட மக்களுக்கு, காற்று மாசுபாட்டினாலும் கூட பரவி வருகிறது'' எனவும் தகவல் தெரிவித்துள்ளது

Tags :