Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களை திரட்டி வகுப்புகள் நடத்துவதை நிறுத்த அறிவுறுத்தல்

மாணவர்களை திரட்டி வகுப்புகள் நடத்துவதை நிறுத்த அறிவுறுத்தல்

By: Nagaraj Wed, 17 June 2020 5:31:19 PM

மாணவர்களை திரட்டி வகுப்புகள் நடத்துவதை நிறுத்த அறிவுறுத்தல்

மாணவர்களை திரட்டி வகுப்புகள் நடத்தப்படுவதற்கு நிறுத்த வேண்டும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பிரத்தியேக மற்றும் தனியார் கல்வியகங்களில் மாணவர்களை ஒன்று திரட்டி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்தல் வழங்கியுள்ளது.

schools,initiative,government,public,announcement ,பாடசாலைகள், முன்னெடுப்பு, அரசாங்கம், பொதுமக்கள், அறிவித்தல்

குறித்த அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் படிப்படியாக குறைந்துவருவதோடு, பொது மக்கள் இயல்பு வழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர்.

அதனடிப்படையில், இம்மாதம் 29ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|