Advertisement

ஆப்கனில் ரம்ஜான் கொண்டாட பெண்களுக்கு தடை விதிப்பு

By: Nagaraj Sun, 23 Apr 2023 10:38:46 PM

ஆப்கனில் ரம்ஜான் கொண்டாட பெண்களுக்கு தடை விதிப்பு

ஆப்கானிஸ்தான்: ரம்ஜான் கொண்டாட தடை... ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வி, வேலை, பொது இடங்களுக்கு செல்வது போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன.

இதன் நீட்சியாக தற்போது மக்லான் மற்றும் தக்கர் மாகாணங்களில் பெண்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் குழுவாக வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

afghanistan,ban,festival,ramadan,women, , ஆப்கானிஸ்தான், தடை, பண்டிகை, பெண்கள், ரமலான்


தக்கர் மாகாணத்தில், பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கூட உணவகங்கள் அல்லது பொது இடங்களுக்குச் செல்ல சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பெண்கள் ரம்ஜான் கொண்டாட 2 மாகாணங்களில் விதிக்கப்பட்டுள்ள தடை, நாடு முழுவதும் நீட்டிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகள் நிதி மற்றும் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களைக் கட்டுப்படுத்தும் தலிபான்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

Tags :
|
|