Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடு - ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடு - ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு

By: Monisha Wed, 17 June 2020 09:53:04 AM

ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடு - ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் ராணுவ வீரர்களை தவிர்த்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கான் அரசு தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களுடைய நிபந்தனைகளை ஏற்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

afghanistan,children,united nations,taliban,coronavirus ,ஆப்கானிஸ்தான்,குழந்தைகள்,ஐக்கிய நாடுகள் சபை,தலிபான்,கொரோனா வைரஸ்

2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சுமார் 3,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தேர்தலில் நிறைய வன்முறைகள் அரங்கேறியுள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்கள் தலிபான்களால் நடத்தப்பட்டுள்ளன. அரசுப் படைகள் தாக்குதல்களாலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலும் நடத்தப்படுவது அதிபர் அஷ்ரப் கானிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Tags :