Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு... கொரோனா கட்டுப்பாடுகள் இருக்குமா?

அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு... கொரோனா கட்டுப்பாடுகள் இருக்குமா?

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:14:47 AM

அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு... கொரோனா கட்டுப்பாடுகள் இருக்குமா?

சென்னை: அரையாண்டு தேர்வு முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்து இன்று மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதில் 6- 12ம் வகுப்பு வரை ஜன.1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

restrictions,enforced,school,students ,கட்டுப்பாடுகள், அமல்படுத்தப்படும், பள்ளி, மாணவர்கள்

இதன்படி இன்று (ஜன.2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனினும் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 4 வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஜன.5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தொற்று பரவல் வேகமெடுத்து இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


இதன் காரணமாக கட்டாயம் மாஸ்க், சமூக இடைவெளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|