Advertisement

கடந்த 9 நாட்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைவு

By: vaithegi Sat, 25 Mar 2023 10:06:56 AM

கடந்த 9 நாட்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைவு

சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 காசுகளிலிருந்து 10 காசுகள் குறைத்து 4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது.இதையடுத்து இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 9 நாட்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்துள்ளது உள்ளது.அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து கொண்டு வருகிறது இதுவே விலை குறைப்புக்கு காரணம் என்கின்றனர் கோழிப் பண்ணையாளர்கள்.

coins,eggs ,காசுகள் ,முட்டை

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. எனவே இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|