Advertisement

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது

By: vaithegi Mon, 01 May 2023 11:44:24 AM

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது

சென்னை: வருகிறது ‘அக்னி நட்சத்திரம்’ மக்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம் .... கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் உயர்ந்து வரும் நிலையில், தற்போது விரைவில் உச்சம் அடையும், அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100-டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் அஞ்சப்படுகிறது.

agni nakshatra,summer ,அக்னி நட்சத்திரம்,கோடை

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வருகிற மே 4- ம் தேதி முதல் தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு அக்னி நட்சத்திரம் போது திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :