Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னிபாத் திட்டம் வரவேற்கத்தக்கது... தமிழக ஆளுநர் அதிரடி

அக்னிபாத் திட்டம் வரவேற்கத்தக்கது... தமிழக ஆளுநர் அதிரடி

By: Nagaraj Sat, 18 June 2022 8:14:52 PM

அக்னிபாத் திட்டம் வரவேற்கத்தக்கது... தமிழக ஆளுநர் அதிரடி

தூத்துக்குடி: நாடுமுழுவதும் மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் செயல்பாடானது வரவேற்கத்தக்கது என தமிழக ஆளுநர் ரவி தெரவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அக்னிபாத் திட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தால் ராணுவ வீரர்கள் முழுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்தினால் மத்திய அரசு ஏலத்திற்கு எடுப்பதாக கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பல மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரயில்களுக்கு தீ வைத்தல், பஸ், லாரிகளுக்கு தீ வைத்தல், கடைகள் அடைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நாடுமுழுவதும் வன்முறையாக வெடித்துள்ளது.

stir,governor,agnipath,plan,support,struggle ,பரபரப்பு, ஆளுநர், அக்னிபாத், திட்டம், ஆதரவு, போராட்டம்

இந்நிலையில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் அப்போது பேசிய அவர் நாடுமுழுவதும் மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அதோடு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் செயல்பாடானது வரவேற்கத்தக்கது என தமிழக ஆளுநர் கூறினார். இதனிடையே நாடு முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வரும் சூழலில் தற்போது தமிழக ஆளுநர் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியது பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.

Tags :
|
|