Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களின் கல்வி திறன் மேம்பட ஒப்பந்தங்கள் கையெழுத்து..

மாணவர்களின் கல்வி திறன் மேம்பட ஒப்பந்தங்கள் கையெழுத்து..

By: Monisha Sun, 10 July 2022 7:45:20 PM

மாணவர்களின் கல்வி திறன் மேம்பட  ஒப்பந்தங்கள் கையெழுத்து..

தமிழ்நாடு: மாணவர்களின் கல்வி திறன் மேம்பட , ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.


முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்திற்கிணங்க, இக்கருவியாக்க மையத்தின் வசதிகளை பயன்படுத்தி, உயிரி தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திடவும், அதன்மூலம் உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களில் நம் மாணவர்கள் வேலை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், உயிரி துறையில் புதிய தொழில் முயற்சிகளில் (Start–ups) ஈடுபட உதவும் வகையிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

students,education,skills,sign ,மாணவர்கள்,கனவு, கல்வி ,திறன் ,

இதற்கென சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா R&D இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், அசோசியேசன் ஃபார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம், சாஸ்தரா TBI மற்றும் விஐடி – டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தால். 35 கோடி ரூபாய் செலவில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் 85,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று கருத்தரங்கு கூடங்கள் மற்றும் இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு உதவும் ஏற்றுமதி வணிக வசதிகள் மையம் உருவாக்கப்படும்.

Tags :
|