Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த இலக்கு நிர்ணயம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த இலக்கு நிர்ணயம்

By: vaithegi Wed, 25 Oct 2023 11:53:29 AM

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த இலக்கு நிர்ணயம்

சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு கொண்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இதுதவிர, பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

diwali sale of aain products ,ஆவின் பொருட்கள் விற்பனை,தீபாவளி

இதன் இடையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ஆவின் ஒன்றியங்களில் பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, ஆயுதபூஜை நிறைவடைந்துள்ள நிலையில், ஆவின் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாகவும் மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுவுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


Tags :