Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுகவுக்கும் பாஜகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அண்ணாமலை பேட்டி

அதிமுகவுக்கும் பாஜகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அண்ணாமலை பேட்டி

By: vaithegi Thu, 21 Sept 2023 3:41:27 PM

அதிமுகவுக்கும் பாஜகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அண்ணாமலை பேட்டி

சென்னை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, மோடியை பிரதமராக ஏற்கிறது அதிமுக. பிறகு பிரச்சனை . தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நான் இங்கு வரவில்லை. தன்மானத்திற்கு பிறகு தான் எனக்கு அரசியல். என் தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது நான் பதில் பேசுவேன். அதிமுக - பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும்.

பாஜக -அதிமுக இடையே எந்த வித பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன். அறிஞர் அண்ணா அவர்களை நான் எங்கேயும் எப்போதும் தரக்குறைவாக பேசியது கிடையாது . மத்தியில் மோடி மாநிலத்தில் எடப்பாடி என நான் சொல்ல மாட்டேன். அதற்காக நான் இல்லை. மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரவே தலைவராக ஆகிவுள்ளேன்.

annamalai,admk,bjp ,அண்ணாமலை ,அதிமுக, பாஜக

அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இருக்கலாம். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான். மது கடை வேண்டாம் என்றவர் அண்ணா; மதுக்கடைக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி.

மேலும் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதே இலக்கு. எந்த கட்சிக்கும் பாஜக போட்டி இல்லை. அதிமுக பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். சனாதனத்தை ஆக்ரோஷமாக மக்களிடம் பாஜக எப்படி பேசுகிறதோ ?அதேபோன்று அதிமுக பேச வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே மையப் புள்ளியில் இணைய வேண்டும் என அவர் கூறினார்.

Tags :
|