Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:45:05 PM

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

புதுடில்லி: கூட்டணி தொடரும்... அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்றிரவு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

இன்று காலை டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பேசிய இபிஎஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார்.

due diligence,eps,assertion,coalition,adjudication,election commission ,
உரிய விசாரணை, இபிஎஸ், வலியுறுத்தல், கூட்டணி, தீர்ப்பு, தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தெளிவாகவும், அதிகாரப்பூர்வமாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ அதிர்ச்சியளிப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தினார்.

Tags :
|