Advertisement

சட்டப்பேரவை தொடர்பாக 14ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்

By: Nagaraj Tue, 08 Dec 2020 10:02:24 PM

சட்டப்பேரவை தொடர்பாக 14ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வரும் 14-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இத்தகவலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் வரும் 14- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

legislatures,tasks,elections,aiadmk meeting,consultation ,சட்டப்பேரவை, பணிகள், தேர்தல், அதிமுக கூட்டம், ஆலோசனை

மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் நிர்வாகிகள் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
|