Advertisement

வருகிற 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By: vaithegi Sun, 02 Apr 2023 11:06:24 AM

வருகிற 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 7 -ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமிபொதுச்செயலாளரான பிறகு முதல்முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

aiadmk district secretaries meeting ,அதிமுக ,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இதனை அடுத்து இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழகத்தில்,

வருகிற 7.4.2023 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிமுக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்டவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :