Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக ... எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக ... எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை

By: vaithegi Mon, 30 Jan 2023 10:44:17 AM

அதிமுக    ...   எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை

புதுடெல்லி: மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை .... அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. ஆனால் அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் என இருதரப்பினரும் தனித்தனியே வேட்பாளரை களமிறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், இரட்டை இலைச் சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

appellate petition,edappadi palaniswami ,மேல் முறையீட்டு மனு , எடப்பாடி பழனிசாமி

இதனை அடுத்து அந்த மனுவில், அதிமுகவின் பொதுக்குழுவில் தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. இந்த நிலையில் இம் மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags :