Advertisement

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

By: Nagaraj Sun, 16 Apr 2023 3:09:08 PM

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கூட்டம் தொடங்கி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

aiadmk leadership,order,identity card,executive committee meeting ,அதிமுக தலைமை, உத்தரவு, அடையாள அட்டை, செயற்குழு கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், கட்சியில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டையோடு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Tags :
|