Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு... சமரசத்திற்கு இடமில்லை

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு... சமரசத்திற்கு இடமில்லை

By: Nagaraj Thu, 16 June 2022 6:18:27 PM

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு... சமரசத்திற்கு இடமில்லை

சென்னை: மீண்டும் பொதுக்குழு நடத்த முடிவு...அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 23-ந் தேதி சென்னையில் நடத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டுவர வேண்டும்
? என்பது பற்றி ஆலோசிப்பதற்காக நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
இதில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும்.

compromise plan,single leadership,aiadmk,denial,o.p.s. , 

சமரசத்திட்டம், ஒற்றைத் தலைமை, அதிமுக, மறுப்பு, ஓ.பி.எஸ்.

ஒருங்கிணைப்பு குழுவை கலைத்துவிட்டு20பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தும்80சதவீத அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர்.அவர்கள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாம் என்று சம்மதித்துள்ளனர். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிர்ச்சியையும்,அதிருப்தியையும் கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும்,ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இரு தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தியதால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.நேற்று2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை முறையை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இதற்காக நேற்று ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான திண்டுக்கல் சீனிவாசன்,ஆர்.பி.உதயகுமார் இருவரும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றனர்.

compromise plan,single leadership,aiadmk,denial,o.p.s. , 

சமரசத்திட்டம், ஒற்றைத் தலைமை, அதிமுக, மறுப்பு, ஓ.பி.எஸ்.

அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துடனும் அவரது ஆதரவாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒற்றைத் தலைமை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் வேட்பாளர் பதவி,எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகியவற்றை விட்டுக் கொடுத்து தியாகம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும்,அவரது ஆதரவாளர்களும் புதிய சமரச திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பதவி மற்றும் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவி ஆகிய2முக்கிய பதவிகளையும் கொடுக்க முடிவு செய்தனர்.இந்த புதிய சமரச திட்டம் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் இந்த புதிய சமரச திட்டத்தை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிட்டால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். எனவே தற்போது இருக்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை.இன்று (வியாழக்கிழமை)3-வது நாளாக அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். அ.தி.முக.வில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

Tags :
|
|