Advertisement

அதிமுக பொதுக்குழு ... இன்று மீண்டும் விசாரணை

By: vaithegi Wed, 04 Jan 2023 09:57:18 AM

அதிமுக பொதுக்குழு   ...   இன்று மீண்டும் விசாரணை

சென்னை: இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை .... கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

எனவே இக்கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

aiadmk general committee,investigation ,அதிமுக பொதுக்குழு,விசாரணை

ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கிறது.

தேர்தல் ஆணையத்தையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்றைய விவாதத்தின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Tags :